Monday, March 12, 2018


சாவின் விளிம்பில் நான் முதிர்வயதானேன் மரணம் இன்ன நாளில் என்று அறியேன், ஆதி 27 \2, மரணக்கட்டுகள் என்னை சுற்றிக் கொண்டது துர்சனபிரவாகம் என்னை பயப்படுத்தினது சங் 18.4 பாதாளக்கட்டுகள் என்னை சூழந்து கொண்டது மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது, சங் 18.5 கர்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் !!! 2 தீமோத் 1 :7தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார், சங் 18,46 கர்த்தர் ஜீவனுள்ளவர் என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக என் இரட்சிப்பின் தேவன் உயர்திருப்பாராக முதல் மணி 31/10/2015 அன்று மாலை சுமார் 4,30 மணியளவில் மாடியில் மழைபெய்த பின்னர் அங்குள்ள நிலமை காணவேண்டி பார்த்தபின் பொறுமையாக கீழே இறங்கிவந்தேன், இரண்டாவது படியில் காலை வைத்ததுதான் நொடிப்பொழுதில்வழுக்கி படார் என்று அதே இரண்டாவது படியில் என் தேகத்தின் 113 கிலோ முழுஎடையுடன் விழுந்தேன், தேவஅநுகிரகத்தால் சமயோசிதபுத்தியுடன் அருகிலிருந்த கிராதியை (கிரிலை) பிடித்துக் கொண்டேன், அதன் காரணமாக சருக்கி தலையில் அடிபடாமல் காத்த தேவன் மரணத்தின் வாசலிருந்து காப்பாற்றினார், எனது உறவினர் பாத்ருமில் வழுக்கிவிழுந்து இறந்த நினைவு என்னை விட்டு நீங்கவில்லை எக்ஸ்ரேயில் எந்த வித எலும்பு முறிவும் தென்படவில்லை, பயங்கர வேதனை பலநாட்கள் நீடித்திருந்தது, சங் 18,6 அற்புதத்தின் தேவன் அதிசயத்தை காணகிருபை செய்தார், கர்த்தாவே தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசத்தத்தில் மகத்துவமுள்ளவரும் துதிகளுல் பயப்படத்தக்கவரும் அற்புதங்களை செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? ‘எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு என் தேவைன நோக்கி அபயமி்ட்டேன், தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தை கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் அவர் செவிகளில் ஏறிற்று,’ இரண்டாம் மணி ஏசாயா 55\8 என் நினைவுகள் உன் நினைவுகள் அல்ல உங்கள் வழிகள் என் வழிகளுமல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார், சங் 139\16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது என் அவையங்களில் ஓன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது, சகரியா 3.7 நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால் நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய் என் பிரகாரங்கைளையம் காவல் காப்பாய் இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு நான் உனக்குக் கட்டளையிடுவேன், 1 இராஜா 3\14 நீயும் என் கட்டளைகளையும் எ்ன நியமங்களையும் கைக்கொண்டு என் வழிகளில் நடப்பாயாகில் உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் ஆம் என் தேவனாகிய கிறிஸ்து இயேசு என் எல்லா வழிகளையும் பார்த்தவராகவே இருக்கிறார்,கடந்த 11/11/2015 அன்று நாகர்கோவிலிருந்து சென்னை திரும்பும் வழியில் திருநெல்வேலியிலிருக்கும் என் அக்காள் கணவர் அத்தான் எரிக் சகாயம் அவா்களையும் கண்மருத்துவர் ஆலேசகர் ஜான் சுதாகர் சகாயம் பொது மருத்துவ ஆலோசகர் ஜுலியட் ஜான் சுதாகர் அவர்களையும் சந்திக்கச் சென்றேன், ஆஸ்பத்திரி ஊழியர் ரவி என்பவர் எனக்கு முன்னதாக கதவைத்திறந்து உள்ளே சென்றவர் போலீஸ் போலீஸ் என்று கூவிச் சென்றார்,எங்கே போலீஸ் என்ற கேள்வியோடு வெளியேவந்த ஜான் எ்ன்ன மாமா என்றார், அப்பொழுது எனது காலில் என்னையறியாமல் சிறுவிரல் வெடித்து இரத்தம் கசிந்ததை மருத்துவர் ஜுலியட் ஜான் சுதாகர் அவர்களிடம் சொன்ன மாத்திரத்தில் இனிமேல் கால தாமதம் செய்ய இயலாது உடனடியாக மூக்கில் ரணசிகிச்சை செய்தே தீரவேண்டுமென்று உறுதியாச் சொன்னார், இந்த ஏற்பாட்டில் எனது மகன் எபினேசரது பின் வேலையும் உண்டு என்பதை அறிந்தேன், கடந்த ஜந்து ஆண்டுகளாக மருத்துவர் ஜுலியட் முன்னதாக வேலைசெய்த திருச்சியிலிருந்து திரும்பதிரும்ப சொல்லும் அடுத்தமுறைவரும் போது செய்து கொள்கிறேன் என்ற எனது உத்திரவாதம் பலிக்கவில்லை, பிரசங்கி 3 3 கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு; ஏசாயா 57 18 அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். ஏசாயா 53 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். அன்று இரவே ரணசிகிச்சை செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர், ஆனால் என் நீரழிவு நோயின் தாக்கம் அதற்கு அனுமதிக்க வில்லை, அந்த வேளையில் தானே ஸ்கேன் ஈசிஜீ மற்றும் தொடர்புடைய எல்லா சோதனைகளும் செய்வதாக முடிவானது, இருதய சிகிச்சை நிபுனர் நடைபயிற்சியில் உள்ள சோதனை யாவும் செய்த பின்னர்தான் ரணசிகிச்சைக்கு அனுப்ப முடியும் என்றதாலும் இரத்தத்திற்காண மருந்து எடுப்பதை குறைந்தது ஐந்து நாட்களுக்கு நிறுத்திய பின்னரே ரணசிகிச்சைக்கு உகந்த தாக அமையும் எனறார், எனவே சனிக்கிழமை என தீா்மானக்கப்பட்டது, நான் சிறுவயது முதல் எனது தோற்றத்திற்கு முக்கியமான மீசைக்கும் சோதனை வந்ததால் மருத்துவரிடம் பணிந்து கேட்டதற்கினங்க குறைத்துக் கொள்ளுங்கள் மழிக்காமல் ரணசிகிச்சையை மேற்கொள்வதாக ஒப்புக்கொண்டார், என் நீரழிவு நோயின் தாக்கத்தை குறைக்க வேண்டிய நடவடிக்கையையும் இரத்த சீராக்க்கத்தையும் மேற்கொண்டு 14/11/2015 என்று என் மனைவியின் பிறந்த தினத்திலேயே ரணசிகிச்சை செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர், இந்த ரணசிகிச்சையின் காரணமாக ஏற்படும் விளைவுகளை சொல்ல முழுமையாக அறிந்து கொண்டேன் என்று கையெழுத்திட்டுக் கொடுத்தேன், சரியாக 9 மணிக்கு ரணசிகிச்சை தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர், சரியாக 9\30 மணிக்கு மருத்துவர் ராஜ்கமல் பாண்டியன் நான் செய்யக்கூடிய ரணசிகிச்சை உங்களால் பார்க்க உணரமுடியும் ஒத்துழையுங்கள் என்றார், நன்றாக செய்கின்ற ரணசிகிச்சையை நன்கு உணர்ந்தேன், கடுமையான போராட்டத்தை மருத்துவர் ராஜ்கமல் பாண்டியன் அவர்கள் மேற்கொண்டார், ஆரம்பமுதலே துர்நாற்றம் தியேட்டர் முழுவதையும் சூழ்ந்து கொண்டது, 20 மில்லி லிட்ட ர் துற்நாற்றத்தின் தேக்கத்தை வெளியே எடுத்துப் பார்த்த பொழுது இந்த துற்நாற்றத்தில் வளர்ந்த பாலிப் எனும் காளான் நான்கு சென்டிமீட்டர் நீளம் நான்கு சென்டிமீட்டர் அகலம் இரண்டு சென்டிமீட்டர் (உயரம்) தடுமன் என இருந்ததைப் பார்த்ததும் அசராமல் அதை சிறிது சிறிதாகப் பிய்த்து எடுப்பதில் கடுமையான போரட்டத்தை மேற்கொண்டார் நான் வாயில் சலைவாய் அதிகமாகி தடுமாறும் பொழுது ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்றே சொல்லிக் கொண்டிருந்தேன், என் கண்களைப் பார்த்தவர்கள் தெப்பியைவைத்து கண்களை மறைத்து விட்டனர், மருத்துவரோ ஜந்து நிமிடம் இன்னும் ஜந்து நிமிடம் என்று சொல்லிக் கொண்டிருந்தார், கேல்சிபைய்டு திட்டபகுதியை கரக் கரக் என்று வெட்டி எடுத்தார் கண்களில் தென்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில் தெளிவாகத் தெரிந்தது, நான் சொன்ன சலைவாய் இரத்தம் என்பது, என்னவோ தெரியவில்லை என் தேவன் கொடுத்த தைரியம் சற்றேனும் பயப்படவில்லல, இயேசுவின் இரத்தம் ஜெயமென்றேன், அவருடைய காயப்பட்ட தழும்புகளால் சுகாமானேன் என்றேன். அருவைச்கிச்சை வெற்றிகரமாக முடிந்ததும் அவ்வளவுதான் என்றார், இந்த அருவைசிகிச்சை செய்யாமல் இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால் அதுபுற்று நோய்க்கு வித்திட்டிப்பதாய் இருந்திருக்கும், சிலர் இந்த அருவை சிகிச்சைக்கு பின்னர் இரத்தம் கொட்டும் சிரமத்துக்குள்ளாயினர், தேவன் முழுதுமாக பாதுகாத்தார் எது எப்படி இருந்தாலும் என் தேவன் எனக்குத் துணைஎன்பதை உணர்ந்தேன், சாவின் விளிம்பிற்கு சென்ற என்னை சேற்றிலிருந்து துாக்கி எடுப்பது போல் மறுவாழ்வு கொடுத்த தேவமகிமை வார்தைகளால் விரிக்கஇயலாது, 2 கொரிந்தியர் 2 : 14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த அருவை சிகிச்சை நல்ல முறையில் செய்து முடித்த மருத்துவர்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் எனக்காக விசேஷித்த விதமாக ஜெபித்தவர்களுக்கு என் உள்ளார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவத்துக் கொள்கிறேன். சைனஸ் என்ற இந்த தாக்கத்தினால் பல பின் விளைவுகள் ஏற்படுவதை மிகவும் தெளிவாக இன்டர்நெட்டில் சொல்லப்பட்டுள்ளது, முன்னதாக ஸ்கேன் எடுத்த பொழுது ஏறக்குறைய நுாற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தெரிகிறது, மருத்துவர்கள் மிகவும் தெளிவாக இது குறித்து என்னிடம் விளக்கினார்கள், இந்த பாலிப் அல்லது காளானின் வளர்ச்சி நாளடைவில் பெரிதாக கண்களை வெளியே தள்ளும் எலும்புகள் பழுதடையும், காது கேட்பதைதடை செய்யும், இன்னும் பலவிதமான பின் விளைவுகளைச் செய்யும் துன்பகரமானது, இவையாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுத்த அன்பு உள்ளங்களை உள்ளத்தின் ஆளத்திலிருந்து வணங்குகிறேன், எந்த வேளையானாலும் எப்படியானாலும் எது செய்தாலும் மனித வாழ்க்கையில் சாவை என் தேவனைத்தவிர யாரலும் தவிர்க்க முடியாது, ஆனால் இந்த வேதனைகள உலகத்தில் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமை அந்த துன்பத்தை தவிர்க்க முயற்சித்து வெற்றிகண்ட யாவரையும் பாராட்டுகிறேன், வேடிக்கை ஆனால் உண்மை, இந்த ரணசிகிச்சையின் காரணமாக தலைகுனிந்தால் இரத்த கசிவு ஏற்படும் என்றும் அறிவுத்தப் பட்டது, ஆம் தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்த பொழுது இரத்த கசிவு ஏற்பட்டது, ஆனால் வேதத்தில் லேவிய 20\13 உங்கள் நுகத்தடிகளை முறித்து உங்களை நிமிர்ந்து நடக்க பண்ணின உங்கள் தேவனாகிய கா்த்தர், லுாக்கா 21\28 இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால் நிமிர்ந்து பார்த்து உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார், சங்கீதம் 20\8 நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது, . சைனஸ் என்ற இந்த தாக்கத்தினால் பல பின் விளைவுகள் ஏற்படுவதை எல்லோரும் அறிந்து தக்க பாதுகாப்பை செய்து கொள்ள எச்சரிப்பது இந்த சாட்சியின் முக்கிய எண்ணமாகும்,
நீ உனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி நீ உனக்குச் சொந்தமல்லவே என்ற பாடல் என் காதுகளில் ரீங்காரமிடுவதைக் கேட்டேன் ,பக்கத்திலிருந்தவரை ஜெபியுங்கள் என்றேன், நன்றாக ஜெபித்தார்கள் அல்லேலுாயா, தேவனுக்கே மகிமை, அருவை சிகிச்சை முடிந்ததற் காண மணியடித்ததாம், நான் தங்கி இருந்த அறைக்கு கூட்டிச் சென்றனர், பேசக் கூடாத வேளையில் பேசும் என்னைப்பார்த்து திகைத்தவர்கள் எல்லோரையும் கைகுலுக்கி நன்றி என்றேன், என் தேவனின் இரக்கத்திற்கு முடிவில்லை, இன்று நான் உயிரோடிருப்பது அவரின் சுத்த கிருபை, இந்த அறுவை சிகிச்சையை முடித்தேதீர வேண்டும் என முடிவு எடுத்தவர்களின் சுத்த அன்பின் தீர்க்கம், என் தேவனாகிய கர்த்தர் எனக்கு மறுவாழ்வை கொடுத்திருக்கிறார், அதேசமையம் இது என் வாழக்கை என் பெற்றோர் மறைந்த ஆல்பர்ட் ஏசுதாஸ் மோஸஸ் மற்றும் டாட்டி மோஸஸ் இறந்த பொழுது நான் எடுத்த முடிவை நினைவு கூறுவதாகவுள்ளது அதன்படி சீக்கிரமாக நான் மோஸ்ஜோஸ் மருத்துமனை ஆரம்பிப்பது தேவ சித்தமாக உள்ளது, அதற்காக நீங்கள் யாவரும் ஜெபிக்கும்படியும் உதவி செய்யும்படியும் பணிவன்புடன் வேண்டுகிறேன், சங்கீதம் 105\6. அவர் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புபளையும் நினைவுகூறுங்கள், சங்கீதம் 18\32. என்னை பலத்தால் இடைகட்டி என் வழியை செவ்வைப்படுத்துகிறவர் தேவனே, சங்கீதம் 26\3 உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது உம்முடைய சத்தியத்திலே நடந்து கொள்ளுகிறேன், சங்கீதம் 15\1. தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்,, உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சத்திகரியும், அப்போ 4 \30 உமது பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரித்தோடு சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகம் செய்தருளும் என்றார்கள், எபேசி 4\7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்கு கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது, யாக்கோபு 1\17 நன்மையான எந்த ஈவும் புரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை, புலம் 3\22 நாம் நிர்முலமாகாதிருப்பது கா்த்தருடைய கிருபையே அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. இந்த சாட்சி உங்களுக்கு பிரயேஜனமுள்ளதாக இருக்குமானால் தயவு செய்து மற்றவர்களுக்கும் உபயோகமாய் பயன்பெறும்படி பகிருங்கள், 2 கொரி 13\14 கா்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும் தேவனுடைய அன்பும் பரிசுத்த ஆவியுடைய ஐக்கியமும் உங்கள் அணைவரோடுங்கூட இருப்பதாக, ஆமேன், இப்படிக்கு உங்கள் அன்புள்ள சங்கை மோஸஸ் ஜெஸ\டின் நிர்மல் குமார், எமது விலாசம் மோஸ்ஜோஸ் மிஷன் திருச்சபை, 16.456 மோஸஸ் அவின்யு முதலாவது பிரதான சாலை திருவான்மியுர் சென்னை 600041, தமிழ்நாடு இந்தியா, 91-044- 24404938 10 /06 / 2017 இரவு சுமார் ஏழு ஜந்து மணியளவில் பெடஸ்டல் மின் விசிறியை வெளியே துாக்கி வரும்பொழுது மாம்ஸ்ல் குசினி வாயில்படியில் நிலைதடுமாறி, மண்டியிடுவது போல் முழங்கால் முட்டி கைகளை ஊன்றி மென்மையாக முகம் குப்புற விழுந்தேன், என் தேவன் என்னை மறுபடியும் எந்தவித வேதனையோ காயமோயின்றி முழுமையாகக் தாங்கினார். சங்கீதம் 37 24 அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். சங்கீதம் 3 5 கர்த்தர் என்னைத் தாங்குகிறார். நீதிமொழிகள் 24 16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்த பொழுது என் பிள்ளைகள் ஜோஷி மற்றும் சுபா துாக்க முடியாமல் துாக்கி நான்எழுந்து நிற்கவைக்க தேவாதி தேவன் கிருபை செய்தார், தேவனுக்கு மகிமையும் ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன், என்னை துாக்கி விட்டவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன், பல முறை தவறி கிழே விழுந்த பொழுதும் அற்புதமாய் இன்றுவரையிலும் காப்பாற்றி வழிநடத்தி வருகிறார், தேவ மகிமையை போற்ற இந்த சாட்சியை எழுதுகிறேன், 22 நாம் நிர்முலமாகாதிருப்பது கா்த்தருடைய கிருபையே அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை 2 கொரிந்தியர் 13 14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். امين இந்த வசனங்களின் தொகுப்பு உங்களுக்கு மிகவும் உபயோகமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்,மேலும் இம்மாதரியான வசனதொகுப்புகள் அவசியமானால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், எமது விலாசம் t சங்கை நாகர்கோவில் மோஸஸ் ஜெஸ்டின்நிர்மல்குமார் மோஸ்ஜோஸ் மிஷன் திருச்சபை 16 மோஸஸ் அவின்யு. திருவான்மியுர், சென்னை 600041, தமிழ்நாடு, தொல்லைபேசி எண் 24404938 Mosjos mass media publication 14-11-2017

No comments:

Post a Comment