Tuesday, March 13, 2018


காதலின் கயமை கசப்பது காலம்கடந்து கவனத்திற்குட்ப்படும்
ஆயுட்கால அரும்பயிரின் அருமை அம்மிமித்து அருந்ததிபார்த்து அழைப்பிதழுடன் ஆயிரம் ஆசீர்வாதமளித்து அரவணைக்க அனாதையாக ஆதரவற்று அவதிப்படாமல் அநுக்கிரமான அடைக்கலமாக ஆத்துமாவின் அரணாக அப்பா அம்மா அண்ணன் அண்ணிஎன அணிவகுக்க ஆருயிர்களுடன் அமைதியாக அன்புமுடிச்சிடாது அவசரப்பட்டு அருகிலுள்ளவர்களின் ஆலோசனையை, அறிவுரைகளை அலட்சியப்படுத்தி அகந்தையுடன் ஆரவாரத்துடன் அழகன் ஆணழகன் ஆச்சரியமிக்கவன் அன்பானவன் அறிவாற்றலுள்ளவன் ஆனந்தமளிப்பவன் அரவணைப்பவன் அதிசயமானவன் அற்புதங்களை அள்ளித்தருபவன் ஆபத்சகாயன் ஆறும்தெரிந்தவனென அகத்தில்பதித்து அலைந்து அல்லல்பட்டு அரங்கேற்றியபின்தான் அமளியில் அலங்கோலப்பட்டு அவதுாறுக்கு ஆளாகி அவமானப்பட்டு அவசரப்பட்டு அவலத்தினால் அவசரப்பட்டேனே அவிசுவாசியின் ஆத்துமா அன்பற்றவன் அக்ரமி அற்பன் அரக்கன் அழுக்கன் அகங்காரமுடையவன் ஆக்ரோஷமுடையவன் அறிவிலி அசிங்கமானவன் அருவருக்கத்தக்கவன் அயோக்கியன் ஆறுமுகமுடையவனென அள்ளித்தெரித்து அடுக்களைகரியைமுகத்திலேற்றி அழுதென்னபயன் 12/03/2018

No comments:

Post a Comment